சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து கலந்துரையாட சபாநாயகரால் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள சில கட்சிகள் மற்றும் ஒரு தரப்பினர் இது அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து சபாநாயகரிடம் இதுவரை பல யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்களும் அரசியலமைப்பு முன்மொழிவுகளை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.