ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அமைச்சுப் பதவிகளுக்காக கடும் போட்டி நிலவி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன
இவர்கள் அவ்வப்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து அழுத்தங்களை பிரயோகித்து இப்பதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 25 உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், 23 அமைச்சரவை அமைச்சர்களில் 13 பேர் ஏற்கனவே பதவியேற்றுள்ள நிலையில் ஆளும் கட்சிக்கு சுமார் 10 அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதில் ஐந்து அமைச்சர்கள் ஏற்கனவே பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில் மிகுதி ஐந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 40 பேர் போட்டியிடுகின்றனர்.