Prime Minister Mahinda Rajapaksa to meet SLPP members tomorrow

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் தமக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெறுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பெரும்பான்மை ஆதரவை இழந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் பதவி விலகவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

இருப்பினும் தனது இராஜினாமாவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்போவதில்லை என்றும் ஆனால் பல விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை வெளியேறுமாறு கோரினால், பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி, நேற்று அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்து.

இந்நிலையில் இன்று ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், அதை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் தற்போது ஆதரவைத் திரட்டி வருகின்றன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap