ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது.

எனினும் சில உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் போது ரணிலுக்கு வாக்களிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

“என்னைப் பொறுத்தவரையில் ஒரு கூட்டு தீர்மானம் எடுத்தால் அதன் பொறுப்பு முழுமையாக தீர்மானம் எடுத்த அத்தனை பேரையும் சாரும்.

அந்த பொறுப்பை எடுக்க மறுப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். அந்த பொறுப்பை நான் தனியே சுமக்க நேரிட்டாலும் அதற்கும் நான் தயார். எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap