உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தந்திரோபாய ஆளில்லா விமானங்கள் என்பன உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யஉக்ரைனுக்கு தற்போது மாதமொன்றுக்கு 7 பில்லியன் டொலர் உதவி தேவைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.