அணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறை ராஜபக்ஷவினர் தோற்றுவித்துள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த பதவிகள் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்த ராஜபக்ஷவினர் நேர்மையான விதத்தில் தமது பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வன்முறை உருவாக்கியிருக்கின்ற ராஜபக்ஷர்கள் யார் மேல் குற்றத்தை சுமத்தப்போகின்றார்கள் என்பது தான் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஜனாதிபதி வேண்டாம் என மக்கள் தெரிவித்துவரும் நிலையில் அவர் தலைமையில் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவது என்பது கேள்விக்குறியே என கூறினார்.
அவ்வாறு உருவானாலும் அந்த இடைக்கால அரசாங்கத்தில் எந்தவிதமான பதவிகளை தான் ஏற்பதாக இல்லை என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.