ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, “வெசாக் கூடு ஆரியகுளத்தில் கட்டுவதற்கு அனுமதிக்கப்படாவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும்” என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கப்பட்டது.

அத்தோடு ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் கட்டளையிட்டார்.

எனினும் நேற்றைய தினம் அவசர அவசரமாக மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழி ஊடாக சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடினர்.

இதன்போது சபை கலைக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை என்றும் சபை தீர்மானத்தை மீற முடியாது என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு முறைப்படி எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்தால் வேறு வழிகள் குறித்து பரிசீலனை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபை, அனுமதி வழங்காமல் இருப்பதற்கு மீண்டும் தீர்மானிக்கப்பட்டது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap