இரசாயன உரம் இறக்குமதிக்கு தடை விதிக்கும் ஜனாதிபதியின் முடிவின் மூலம் நாட்டில் விவசாயிகளுக்கும் விவசாயத் துறைக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அமைச்சர் ரமேஷ் பத்திரன, விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே இரத்தின தேரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 10 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், விவசாயத் தொழில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
கடுமையான திட்டமில்லாமல், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறாமல், இரசாயன உர இறக்குமதிக்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.