இன்றும் நாளை மறுதினம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் ரமழான் தினமான நாளை மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய A,B,C ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை 2 மணிநேரமும், D,E,F ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மமணிநேரமும்
G,H,I ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 3 மணிவரை 2 மணிநேரமும், J,K,L ஆகிய வலயங்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 2 மணிநேரமும் மின்சாரம் தடைப்படும்.
மேலும் A,B,C,D ஆகிய வலயங்களில் மாலை 5 மணிமுதல் 6.20 வரை ஒரு மணி 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் E,F,G,H ஆகிய வலயங்களில் மாலை 6.20 முதல் 7.40 வரை ஒரு மணி 20 நிமிடங்களும், I,J,K,L ஆகிய வலயங்களில் இரவு 7.40 முதல் 9 மணிவரை ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.
இவற்றை தொடர்ந்து U,V ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2 மணிநேரமும், W,R ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மணித்தியாலங்களும்,
S,T ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 3 மணிவரை 2 மணித்தியாலங்களும், P,Q ஆகிய வலயங்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 2 மணித்தியாலங்களும்,
U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5 மணிமுதல் 6.20 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.
R,S,T ஆகிய வலயங்களில் மாலை 6.20 முதல் 7.40 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும், P,Q இரவு 7.40 முதல் 9 மணிவரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும்,
CC எனப்படும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரை 3 மணித்தியாலங்ளும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.