பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் , நேற்றைய தினம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இதன்போது பாதுகாப்பு, பொருளாதாரம், அணுசக்தி, பருவநிலை மாறுபாடு, சர்வதேச விவகாரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடாத்தியுள்ளனர்.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இரு நாடுகளின் பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு இடம்பெறுகின்றது என்றும் இந்த ஆண்டுக்குள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பதாகவும் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தியாவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக செயற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், பிரித்தானியாவும் இணைந்து செயற்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap