காலி முகத்திடலில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவுக்கு நீதி கோரிய பாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

அந்தவகையில் ராஜபக்ஷ… அவர்களின் இரத்தம் உங்கள் கைகளில் உள்ளது என சிங்கள மொழியில் பதாகை அமைக்கப்பட்டிருந்தது.

தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்திகளை வழங்கிவந்த அவர், 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் மௌனிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap