ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் தான் புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளப்போவதில்லை என முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

தமது கட்சியைச் சேர்ந்த ஐவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தனக்குத் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சிய 4 பேரில் மூவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவலால் தெரிவிக்கின்றன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap