அலரிமாளிகைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுமாற கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த கோரிக்கை கொழும்பு மேலதிக நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஏதேனும் ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைதியின்மையை ஏற்படும் பட்சத்தில் அவர்களை கலைக்குமாறு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
குறிப்பிட்ட போராட்டக்காரர்களின் பெயரை குறிப்பிடாமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல தெரிவித்தார்.