அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை அங்கிருந்து வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் இறையாண்மையை நசுக்கும் பொலிஸாரை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap