கட்சி என்ன முடிவெடுத்தாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட போவதில்லை என காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை என்ற கொள்கையிலேயே தொடர்ந்தும் செயற்படுவதாகவும் ஷான் விஜயலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.