அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வரைவு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் 21வது திருத்தச் சட்டமூல வரைவை ஆலோசித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் குறைந்தது இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

கலந்துரையாடலின் முடிவுகளின் அடிப்படையில் நீதியமைச்சரால் வரைவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான ஆவணம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு பின்னர், 21 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்படும்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவை நீதியமைச்சர் இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap