அதிகாரம் மற்றும் பதவி மீது பேராசை கொண்டால் இதுதான் நடக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று பேசிய அவர், மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 2வது ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் தினத்தன்று அலரிமாளிகையில் கூடியிருந்த தமது கட்சியினர் போராட்ட தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார்.

அத்தோடு இந்த தாக்குதலை நடத்த அன்றைய தினம் தவறான ஆலோசனைகளும் சிலர் தூண்டியும் விட்டமையினால் வன்முறை வெடித்தது என்றும் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இருந்து காலி முகத்திடலுக்கு சென்ற தமது கட்சியினரை பொலிஸார் தடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap